அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
|
பகுதி - 6 |
|
|
68.
'சுதேசி' பத்மநாபய்யங்கார்:
1908-ல் வ.உ.சி., சிவா, நெல்லையப்பர் முதலியோருடன் சிறை
தண்டனை விதிக்கப்பெற்ற திருநெல்வேலித் தலைவர். ஆங்கிலப்
பத்திரிகை நடத்தி சுதேசி இயக்கத்தைப் பரப்பியவர் |
69.
பரலி சு.நெல்லையப்பர்: பாரதியின் நெருங்கிய நண்பர்,
'இந்தியா'வில் வேலை பார்த்தவர், சிறந்த கவிஞர், 'லோகோபகாரி'
பத்திராதிபர்.
(1939-ல் எடுத்தப் படம்) |
|
70.
காந்திஜீயும் ராஜாஜீயும்: பாரத விடுதலை இயக்கத்தின்
அஸ்திவாரமும் அரணுமான இவ்விரு தலைவர்கள் 1919-ல் கூடிய
சமயம் அவர்களுக்கு பாரதி வலிய ஆசீர்வதித்தார் (1945-ல்
எடுத்தப் படம்) |
|
|
71.
விடுதலைக்கு உதவியவர்கள்: 1918 முடிவில் பாரதியை அரசாங்கம்
விடுதலை செய்ய உதவிய பெருமக்களில் இருவர். 'மித்திரன்'
ஆசிரியர் ரங்கஸ்வாமி அய்யங்கார், அரசியல் தலைவர் ஸி.பி.ராமஸ்வாமி
அயயர்
(சுமார் 1936-ல் எடுத்தப் படம்) |
72.
இரு நண்பர்கள்: பாரதியின் ஆதிகால நண்பரும் தொழிலாளர்
தலைவருமான வி.சக்கரை செட்டியாரும் (படத்தில் வலக்கோடி),
நாவலர் ஸத்திய மூர்த்தியும்(இடக்கோடி), இவர்களுடன் ஆந்திரத்
தலைவர் வி.வி.கிரியும் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசுவதை
இந்த 1936 படம் காட்டுகிறது |
|
|
73.
அன்னி பெஸண்ட்: அரசியலில் பாரதிக்கும் தமக்கும் வேற்றுமை
இருந்தும் பாரதி விடுதலைக்கு உதவிய ஹோம் ரூல் இயக்கத்
தலைவி அன்னி பெஸண்ட் |
74.
'மித்திரன்' ஆசிரியர்:1920-ல் பாரதி மீண்டும் 'மித்திர'னில்
சேர்ந்த சமயம் அதன் ஆசிரியராயிருந்த ஏ.சங்கஸ்வாமி அய்யங்கார்.
பாரதியை மிகவும் ஆதரித்தவர் |
|
|
75.
'மித்திரன்' நிர்வாகி: பாரதி காலத்தில் 'மித்திரன்'
நிர்வாகக் குழுவிலும், அதன் ஆசிரிய பீடத்திலும் இருந்த
சி.ஆர்.ஸ்ரீநிவாஸன், வசனத்தில் பாரதியின் நேர் நடையைக்
கைக்கொண்டவர் |
76.
மாடிப் படி: 'மித்திரன்' அலுவலகத்துக்குள் செல்லும்
படி. முன்பு மரப்படியாக இருந்தது. பாரதி இரண்டு மூன்று
படிகளைச் சேர்த்தே தாண்டுவாராம் |
|
|
77.
'மித்திரன்' அலுவலகம் 1921: பாரதி காலத்தில் ஜார்ஜ்
டவுனில் 'மித்திரன்' இருந்த கட்டடம். எரபாலு செட்டி
தெருவும் ஸிங் கண்ண நாய்க்கன் தெரும் கூடுமிடம் |
78.
வி.பி.ஹால்: 'நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதியின்
சொற்பொழிவு நடந்த சென்னை வி.பி.ஹால் |
|
|
79.
நீதிபதி மணி அய்யர்:
'நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதியின் சொற்பொழிவு
நடந்த சென்னை வி.பி.ஹால் கூட்டத்துக்குத் தலைமை வகித்த
நீதிபதி மணி அய்யர் |
80. கி.சடகோபன்: திருவல்லிக்கேணியில் பாரதியின் கடைசி
நாட்களில் அவரை நன்கறிந்தவர் |
|
|
81.
வி.ஹரிஹர சர்மா: புதுவை 'இந்தியா' பத்திரிகையின் உதவியாசிரியர்,
புரட்சி வீரர், காந்தி பக்தர், ஹிந்தி பிரசாரகர், பாரதி
பிரசுராலயம் அமைத்து நடத்தியவர்களுள் ஒருவர் |
82.
ஆர்.சின்னசாமி: பாரதியின் கடைசிக் காலத்தில் அவரை நன்கு
அறிந்திருந்த தேசபக்தர், அறிவாளி, ரசகர் |