அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்கள் தொகுத்த 'சித்திர பாரதி') |
|
பகுதி - 4 |
|
|
45.
பாரதி சீடர்: வ.ரா.(பிற்காலப் படம்) |
46.
பாரதி சீடர்: 'பாரதிதாசன்' |
|
|
47.
உதவியாளர்: ஏழை நெசவாளி 'வெல்லச்சு' கிருஷ்ணஸ்வாமி செட்டியார்.
பாரதிக்குப் பல சமயம் பண உதவி அணித்தவர். இவரது குட்டையான
தோற்றத்தினால் பாரதி இவரை 'வெல்லச்சு' என்றழைத்தார் |
48.
தொண்டர்: பாரதியையும் அரவிந்தரையும் இளமையிலேயே நன்கறிந்திருந்தவரும்,
அரவிந்தரின் சீடராக அரவிந்தாசிரமத்தில் இருந்தவருமான
அமுதன் |
|
49.
ஆதரவளித்த சீமான்: பல வகைகளில் பாரதிக்கு ஆதரவளித்து
வந்த சீமான் பொன்னு முருகேசம் பிள்ளையும் அவரது மனைவியார்
அண்ணியம்மாளும் |
|
|
50.
தொண்டர்: பொன்னு முருகேசம் பிள்ளையின் மூத்த புதல்வர்
ராஜா பகதூர் (1939-ல் எடுத்தப் படம்) |
51.
தொண்டர்: பொன்னு முருகேசம் பிள்ளையின் இளைய புதல்வர்
கனகராஜா (1930-ல் எடுத்தப் படம்) |
|
52.
பாரதி பூஜித்த விக்கிரகமும் வாளும்: ஏழைப் பணிப் பெண்
அம்மாக்கண்ணு வீட்டில் பாரதி பூஜித்ததாகச் சொல்லப்படும்
தத்தாத்ரேய விக்கிரகமும் வாட்களும். அருகே நிற்பது அம்மாக்கண்ணுவின்
மூத்தப் புதல்வர் வேணு என்ற வேணுகோபால் நாகயர். (1938-ல்
எடுத்தப் படம்) |
|
|
53.
அம்மாக் கண்ணு: பாரதியிடமும் அவரது குடும்பத்தாரிடமும்
மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பணிப்பெண். (1938-ல்
எடுத்தப் படம்). வ.ரா. இவ்வம்மையாரை மிகவும் போற்றியுள்ளார் |
54.
கோவிந்தன்: அம்மாக்கண்ணுவின் இளைய புதல்வர் கோவிந்தசாமி,
பாரதியும் குடும்பத்தாரும் இட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில்
சூரர்.
(1930-ல் எடுத்த படம்) |
|
|
55.
'பிரம்ம ராய அய்யர்' என்று பாரதி அழைத்த புரொபஸர் சுப்பிரமணிய
அய்யர். இவரைப் பற்றிப் பல பாரதி கட்டுரைகளில் குறிப்புகள்
வருகின்றன |
56.
தயாளு: செல்வந்தரும் புதுவை தேச பக்தர்களில் உற்ற நண்பரும்,
அவர்களை ஆபத்தில் காத்தவருமான கலவை சங்கர செட்டியார் |
|
|
57.
சீடர்: பாரதியால் பூணூல் அணிவிக்கப் பெற்ற ஹரிஜனச் சீடர்
ரா.கனகலிங்கம் (1953-ல் எடுத்தப் படம்) |
58.
உதவியளித்த செல்வந்தர்: பாரதி, வ.வே.ஸு.அய்யர், வ.ரா.,
ஆஷ் கொலை வழக்கு எதிரி மாடசாமி முதலியோருக்கு உதவியாயிருந்த
செல்வந்தர் ஆறுமுகம் செட்டியார். (1939-ல் எடுத்தப்
படம்) மாடசாமியைத் தம் வீட்டில் ஒன்றரை வருஷம் பரம ரகசியமாய்
வைத்துக் காத்ததாக இவர் கூறினார் |