காசியில் சுப்பையா, சென்னையில் பாரதி!
பண்டிட் எஸ்.நாராயண அய்யங்கார்

(பண்டிட் எஸ்.நாராயண அய்யங்கார் ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் அறிஞர்.ஆயுர் வேத சாஸ்திரத்தில் கரைகண்ட நிபுணர். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற பல ஆயுர்வேதாசாரியர்களும் அவரது சிஷ்யர்களே. ஆதிகாலந்தொடங்கிய பாரதியாருடன் நெருங்கிய நண்பர். இளமையில் பாரதிக்கும் தமக்கும் இடையே இருந்த தொடர்பை விளக்கி இக்கட்டுரையில் எழுதியுள்ளார். இது 'தினமணி சுடர்' 08.09.1956, 16.09.1956 இதழ்களில் இந்நூலாசிரியர் ஏற்பாட்டில் வெளிவந்தது. - ரா.அ.பத்மநாபன்)

ஆங்கில அரசாட்சியில் பாரதியின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவது ஆபத்தாக முடியும் என்று கருதினேன். சதந்திரம் கிட்டிய பிறகு பாரதியாருடன் என்னைவிட அதிகப் பழக்கமுள்ளவர்கள் அவரது சரித்திரத்தை எழுதக் கூடும் என்ற நினைத்தேன். பாரதியாரின் சரித்திரத்தை எழுதியவர்கள் அவரது பெருமையை வர்ணிப்பதுடன் நின்றுவிட்டார்களேயன்றிச் சரித்திர ரகஸ்யங்கள் உணர்ந்து எழுதியதாகத் தெரியவில்லை. ஆகவே நான் அறிந்தவரை அவர் சரித்திரத்தைக் குறிப்பிடுகிறேன்.

நானா சாஹேப் அவர்களைப்பற்றிச் சில வருஷங்களுக்க முன் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்த; அவர் தமது கடைசிக் காலத்தில் ஹிமாலயக் காடுகளில் ஓடி ஒளிந்து காலமானார் என்று சரித்திரங்களில் எழுதியிருப்பது தவறு என்றம், 1918 ஆம் வருஷம் வரை அவர் ஜீவியதசையில் இருந்ததைத் தாம் பார்த்ததாகவும் ஒரு நிருபர் எழுதியிருந்தார். அந்தச் செய்தி முற்றிலும் உண்மையே. ஏனெனில் 1906 அல்லது 1907 இல் நான் மயிலாப்பூரில் வரை நேரில் சந்தித்தேன். இவ் விஷயம் கவி பாரதியாரின் சரிதிரத்தோடு தொடர்புடையதாகையால் அதுபற்றி இங்கே குறிப்பிடுவது அவசியமாயிற்று.

பாரதியாரின் 18ஆவது வயதுமுதல் இறுதிவரை பல பல சந்தர்பங்களில் மிக நெருங்கியும் பல சமயங்களில் சற்று விலகியிருந்தும் பழக்கமுள்ளவன் நான். கரூர்த் தாலூகா நெரூர் கிராமத்தைச் சேர்ந்த நான் ஸம்ஸ்கிருதப் படிப்பை உத்தேசித்துக் காசிக்குக்குச் சென்றேன். ஏற்கெனவே காசியில் வசித்துவந்த பாரதியாரின் நட்பு அங்கு எனக்கு ஏற்பட்டது. காசி ஹநுமத் கட்டம் சிவ மடத்திற்குச் சொந்தக்காரரான ஸ்ரீ கேதார சாஸ்திரிகளுக்குப் பாரதியிரின் சகோதரியை மணம் செய்து கொடுத்திருந்தார்கள். பாரதியார் சிவ மடத்தில் வசித்து வந்தார். அற்கு எதிர் வீட்டில் நான் தங்கியிருந்தபடியால் எங்கள் இருவருக்கும் அதி சீக்கிரத்தில் சிநேகம் ஏற்பட்டது. அக்காலத்தில் அவருக்குச் சுப்பையா என்று பெயர். நானும் அந்தப் பெயரைக் கொண்டே எழுதுகிறேன்.

ஸ்ரீ சுப்பையா
சுப்பையாவுக்கு அப்பொழுது 18. எனக்கு 16. அக்காலத்தில் கர்ஸான் பிரபு இந்தியாவின் வைசிராயாக இருந்தார். 1900-ஆம் வருஷம் எங்களுக்குள் நட்பு வலுவடைந்தது, சுப்பையா மிக்க வறுமையில் ஆழ்ந்திருந்தார். ராஜீய விஷயங்களில் எவ்விதச் சம்பந்தமும் அவருக்கு அப்போது கிடையாது. எனது 12/ஆவது வயதிலிருந்தே தினசரிப் பத்திரிகைகள் படிப்ப்து எனது பழக்கமாக இருந்தது. தவிர, தீவிரவாதிகள் கோஷ்டியிலும் நான் சேர்ந்தவன். வெள்ளையர்களை அழிக்காமல் இந்தியா சுயராஜ்யம் அடையாது என்பது எனது தீவிரமான முடிவு. சுப்பையா அரசியல் விஷயத்தில் கொஞ்சமும் அறிவு இல்லாமலே இருந்து வந்தது எனக்கு வியப்பைத் தந்தது. அக்காலத்தில் காசியில் தங்கியிருந்த அன்னி பெசன்ட் அம்மையுடன் சர்ச்சை செய்யப் போவார். அம்மையார் பதில்களில் திருப்தி கொள்ளாமல், அம்மையார் அறிவைப்பற்றி கேலி செய்வார்.

பள்ளியாசிரியர்
காசியில் அவர் கடைசியாக ஒரு பள்ளியில் ஆசிரியர் பதவி பெற்று மாதம் இருபது ரூபாய் சம்பாதித்து வந்தார். அக் காலத்தில் அவருக்குத் தமிழ் இலக்கியம் தெரியும் என்றோ, கவி பாடும் திறமை பெற்றவர் என்றோ நான் நினைக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கையில் எப்பொழுதும் ஷெல்லியின் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொண்டூ படிப்பார். ஓய்வு நேரங்களில் கங்கைக் கரையில் படிக்கட்டில் உட்கார்ந்து ஷெல்லி பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்லுவார். வடமொழியில் அவருக்குப் பயிர்ச்சி சொல்பமே. ஆனால் வடமொழிக் கவிகளின் அர்த்தத்தைக் கேட்டு அதை ரசிப்பதில் நிகரற்றவர்.

சரஸ்வதி பூஜையன்று
'சுதேசமித்திரன்' அக்காலத்தில் ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்டு வந்தது. அரண்மனைக்காரத் தெரு தெற்கு ஓரத்தில் கீழ் வரிகையில் மித்திரன் ஆபீஸ் இருந்தது. லிங்கிநு செட்டித் தெருவில் ஒரு தனி வீடு அமர்த்திக் கொண்டு மனைவியுடன் சுப்பையா வசித்து வந்தார். அக்காலதிதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 'தங்கம்' என்று பெயர். சுப்பையா புதுச்சேரி போகும் வரை லிங்கிச் செட்டித் தெருவில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மயிலாப்பூரில்வெங்கடரமண வைத்தியசாலை நிறுவிய காலத்தில் அதில் ஓர் வைத்திய ஆசிரியர் பதவி எனக்குக் கிடைக்கக்கூடும் என்ற ஆசையால் நான் நென்னை சேர்ந்தேன்.

சுப்பையா மித்திரன் ஆபீஸில் அமர்ந்துள்ளார் என்று என்குக் தெரியும். சென்னையில் எனக்கு வேறு யாரும் பரிச்சயமில்லாததர்ல் சுப்பையாவை கண்டு பிடித்தே தீரவே வேண்டியிருந்தது. ஆகவே மித்திரன் ஆபீசை விசாரித்துககொண்டு அங்கே போய்ச் சேர்ந்தேன். வாசலுக்குப் பக்கத்து அறையில் மானேஜர் அமர்ந்திருந்தார். அவரிடம் போய், "சுப்பையா இருக்கிறாரா? நான் அவருடைய நண்பன். அவரை நான் பார்க்கவேண்டும்" என்று சொன்னேன்.

சுப்பையா இல்லை
"அந்தப் பெயருள்ளவர் யாரும் இந்த ஆபீஸில் இல்லை" என்று கூறிவிட்டார் மானேஜர். அதைக் கேட்டவுடன் நான் திகைதத்தேன். ஒரு சமயம் மித்திரனை விட்டு வேறு எங்காவதுப் போய்விட்டிருக்கலாம் என்றும் அப்படி இருந்தால் அவரைக் கண்டுபிடிப்பதுதான் எப்படி என்றம் தயங்கித்தயங்கி நின்றேன். எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்ததால் ஆபீஸ் விடும்வரை அங்கேயே இருந்து வெளியே வருபர்களைக் கவனித்துவிடவேண்டும் என்றும், ஒரு வேளை மானேஜர் சுப்பையாவை அறியாமல் இருக்கக் கூடும் என்றும் தோன்றியது. ஆகவே அங்கேயே நின்றேன்.

அந்த வீட்டு வாசல் திண்ணை மிகக் குறுகியது. திண்ணையில் நிற்கலாமேயன்றி உட்கார முடியாது. பகல் இரண்டு மணிமுதல் மாலை நான்கு மணிவரை நின்று கொண்டேயிருந்தேன். அப்போது சுப்பையா மாத்திரம் உள்ளிருந்து வெளியே வந்தார்.

"எப்பொழுது வந்தீர்?" என்று என்னைக் கேட்டார்

"இரண்டு மணிக்கே நான் வந்துவிட்டேன்" என்றேன். அதைக் கேட்டவுடனே அடங்காக் கோபம் வந்துவிட்டது. மானேஜர் என்னை அலட்சியம் செய்துவிட்டதாகச் சுப்பையா நினைத்துவிட்டார். உடனே அவருடை நீண்ட இரு விழிகளும் சிவந்தன. மீசை துடித்தது. எனக்கும் விஷயம் விளங்காததால் மனம் கலங்கிற்று.

உடனே சுப்பையா மானேஜர் அறைக்குள் போனார். "என்னைத் தேடி வந்தவரை வீதியில் நிறுத்திவிட்டீரே" என்று கடிந்தார். மானேஜரும் சுப்பையாவின் கோபத்துக்குப் பயந்து, கெஞ்சிய குரலில், "அவர் உங்களைப்பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லையே; சுப்பையாவைப்பற்றிக் கேட்டார். அப்பெயர் உள்ளவர் இங்கு யாரும் இல்லை என்று பதில் சொன்னேன்" என்றார்.

இதைக் கேட்ட பிறகு சுப்பையா என்னைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சுப்பையாவை ஆபீஸில் வைத்துக்கொண்டே மானேஜர் அப்பெயர் உள்ளவர் ஒருவரும் இல்லை என்று ஏன் சொன்னார் என்பது எனக்கு விளங்கவில்லை. போகும் வழியில் இதைப்பற்றி சுப்பையாவைக் கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "நான் காசியில் சுப்பையா; சென்னையில் சுப்ரமண்ய பாரதி ஆகிவிட்டேன் சென்னையில் பாரதி என்று சொன்னால்தான் தெரியும்" என்று பதில் சொன்னார். நாமும் இனி அவரைப் பாரதியார் என்றே அழைப்போம்.
பாரதியார் லிங்கிச் செட்டித் தெருவில் சுகமாகவே வசித்து வந்தார். சென்னையில் அவர் வசித்து வந்த காலத்தில் மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள், ரகசியங்கள் பல நடந்தன. இதுவரையில் பாரதியாரின் வாழ்க்கையில் விசேஷ சம்பவம் எதுவும் இல்லை.

1904ஆம் வருடத்தில் நான் பாரதியாரைச் சென்னையில் சந்தித்த ஞாபகம். அக்காலத்தில் பிரபல ஜோசியரான பி.ஆர்யந்ராயண ராவ் ஆங்கிலத்தில், 'அஸ்ட்ரலாஜிகல் மாகஸைன்' என்ற மாதப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் பிருஹத் ஜாதகம் முதலிய வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவி புரிந்து ஒரு சிறிய உத்தியோகத்தைப் பெற்றேன். ஆகவே, நானும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தேன்.

மாணவ நண்பர்கள்
பாரதியார் சென்னையில் பல நண்பர்களைப் பெற்றார். அவர்களை அனைவரும் 'கிருஷ்டியன் காலேஜ்' மாணவர்களே. காலை வேளைகளில் காலேஜ் மாணவர்களின் கூட்டம் அவர் வீட்டில் நிந்திருக்கும்; மாலை வேளைகளிலும் இப்படியே. அநேகமாகப் பிரதிதினமும் மாலை வேளைகளில் கடற்கரைக்குப் போவது வழக்கம். துறைமுகத்துக்குப் பக்கத்தில் எல்லாரும் உலாவ வருவார்கள். பாரதி கடற்கரை மணலில் உட்கார்ந்ததும் அவரைச் சுற்றி மாணவர்கள் கூட்டமாக உட்கார்ந்துவிடுவார்கள். சில மாணவர்கள் பாரதியாரைத் தேசீய கீதங்கள் பாடும்படி வேண்டிக்கொள்வார்கள். அவரே பாடும்போது அவரது பாட்டுகள் மிகவும் உருக்கமாக இருக்கும். மாணவர்களோடு சேர்ந்து நானும் அந்தப் பாடல்களைக் கேட்டு அனுபவித்திருக்கிறேன்.

தினசரி வேலைகள்
கடற்கரையிலிருந்து இரவு ஏழரை மணிக்குத்தான் திரும்புவோம். இரவில் பாரதியார் ஆங்கிலத் தினசரிகளைப் படித்து முக்கியமான நிகழ்ச்சிகளைச் சிவப்புக் கோடிட்டுக் குறித்துக்கொள்ளுவார். 'பயோனீர்', 'ஸ்டாண்டர்டு', 'மெயில்' போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளைபும், கல்கத்தாவிலிருந்து வெளியான 'அமிருத பஜார்', 'வந்தே மாதரம்' போன்ற பல ஆங்கிலத் தினசரிகளையும் பாரதியார் தினமுமபடிப்பார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது.
ஆபீஸ் வேலையில் பாரதியாருடைய சுறுசுறுப்பைக் கவனித்து, ஜ.சுப்பிரமணிய ஐயர் அவரிடம் மிகவும் அன்பு பாராட்டினார். ஆபீசிலிருந்த மற்றவர்களும், பாரதியாரிடம் விஷேச மதிப்பும் அன்பும் கொண்டிருந்தார்கள்.

உத்தம லட்சணம்
மனிதர்கள் அங்க லக்ஷணங்களைப்பற்றிக் கூறும்போது, தலை குடை வடிவமாகவும், நெற்றி உர்ந்து பரந்து விசாலமாகவும், கண் நீண்டு பெரியதாகவும், கடைக்கண் சிவந்தும், மூக்கு உயர்ந்தும் இருந்தால் அவன் உத்தம புருஷன் என்று கூறுவார்கள். இந்த லக்ஷணங்களை இதுவரை என் அனுபவத்தில் மூன்று பேரிடம் கண்டேன். ஒன்று பாரதியார்;மற்றவர், ஸி.ஆர்.தாஸ்; மூன்றாமவர், காட்டுப்புத்தூர் ஜமீன்தார் சிதம்பர ரெட்டியார். பின் சொன்ன இருவரும் பெரிய செல்வந்தர்கள் என்பது பிரசித்தம். பாரதியாருக்குக் கிடைத்தது பெரும் புகழ்தான். அப்பொழுது பத்திரிகையில் அவருக்குக் கிடைத்த நம்பளம் நாற்பது ரூபாய்தான். அது அவருடைய செலவுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. பணக்கார நண்பர்களும் அவருக்குக் கிடையாது.

குடும்படும் நண்பர்களும்
ஆகவே, அவர் தமக்குத் தெரிந்த காலேஜ் மாணர்வகளிடமே உதவி பெறவேண்டியிருந்தது. பிறரிடம் வாங்கும் பணத்தைத் திருப்பித் தரப் பாரதியாருக்கு முடியவதில்லை. அதுபோலவே அவரிடம் பணம் பெற்றுப் போவாரிடம் அவர் திருப்பிக் கேட்கமாட்டார்.

குடும்ப நிர்வாகப் பொறுப்பில் பல தடவைகளிலும் அசட்டையாகவே இருந்துவிடுவார். "இன்று கடையிலிருந்து அரிசி வந்தால்தான் சாப்பழ; இல்லாவிடில், பட்டினிதான்" என்று அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அரிசி முதலியவற்றை அன்பர்கள் இனாமாக வாங்கிக் கொடுத்ததுண்டு. ஒ.கந்தசாமிச் செட்டியார் என்பவர் பாரதியாரின் நண்பர். அவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் லெக்சரராக இருந்தார். ஸ்ரீசக்கரைச் செட்டியார் பாரதியாரின் நெருங்கிய நண்பர். அவர் சென்னை மண்ணடியில் வசித்துவந்தார். அவரைப் பிரதி தினம் பாரதியார் சந்தித்துப் பேசுவது வழக்கம். இருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள்; அவர்கள் பேச்சு எனக்கு விளங்காது.

பாரதியார் போகுமிடமெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார். கலாசாலைக் கூட்டத்தில் பாரதியார் அடிக்கடி பிரசங்கம் செய்வார். தேசீய கீதம் பாடுவதிலும், அதன் மூலம் உணர்ச்சி மிக்க கருத்துக்களை வெளியிடுவதிலும் அவர் நிகரற்று விளங்கினார்.

பொது வாழ்வில்
அக்காலத்தில் காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறுவது மிக துர்லபம். ஸ்ரீ ஜி.சுப்பிரமணிய ஐயர் காங்கிரஸ்வாதியாக இருந்தார். அவர் திருவல்லிக்கேணிக் கடற்கரையிலும் ராயபுரம் கடற்கரையிலும் அபூர்வமாகக் கூட்டம் போடுவார். அநேக கூட்டங்களில் அவரே பேசுவார். பொது ஜனங்களிடையே காங்கிரஸ்பற்றிய ஊக்கம் மிகக் குறைவாக இருந்தது.
பாரதியாரின் அரசியல் நோக்கங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன. பொதுவாக பச்சையப்பன் கல்லூரி, பிரஸிடென்ஸி காலேஜ், கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவைகளின் மாணவர்களிடையே பாரதியாரின் செல்வாக்கு வளர்ந்து வந்தது.

உ.வே.சாமிநாதையர் தொடர்பு
அப்போதுதான் ஒரு சமயம் பிரஸிடென்ஸி காலேஜில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த உ.வே.சாமிநாதையருக்கு 'மஹாமஹோபத்தியாய' விருரை அரசாங்கத்தார் அளித்தார்கள். அதைக் கொண்டாடி ஐயரவர்களைக் கௌரவிப்பதற்காகக் காலேஜ் மாணவர்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். கூட்ட நிர்வாகிகள் பாரதியாரிடம் வந்து விஷயத்தை சொல்லி, அய்யரவர்களின் பெருமைகளை விளக்கி ஒரு கவிகள் பாடவேண்டும் என்றும், நேரில் கூட்டத்துக்கு வந்திருந்து கூட்டத்தை நடத்திக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள்.

பாரதியாரும் சாமிநாத அய்யரும் ஒரே ஊரில் வசித்தபோதிலும் பரஸ்பரம் கிடையாது. ஐயர் அவர்கள் பாரதியாரைப்பற்றி ஒன்றும் அறியார். பாரதி என்ற பெயரையே கேட்டதில்லை. கூட்ட நிர்வாகத்தினர் அமைப்புக்கிணங்கி பாரதியார் மூன்று பாங்கள் எழுதினார்.

நொந்த மனம்
பாரதியார் அந்தக் கூட்டத்துக்கு சென்றார். கூட்டம் ஆரம்பமானதும் மூன்று பாக்களும் பாரதியாரால் பாடப் பெற்றன. பிறகு அயயரவர்களைப்பற்றிப் புகழுரைகள் தொடங்கின. இச் சமயத்தில்தான், பாரதியாரின் நண்பர் ஒருவர் அவரிடம் தனியே ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

பாரதியாரின் அந்த நண்பர் திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்; சென்னையில் சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். பாரதியாருடன் மிகவும் பழகியவர். கூட்டத்தில், பாரதி கவி பாடி முடிந்தவுடனேயே, அவரிடம் வந்து "அந்தப் பாக்கள் மூன்றுமே ஆபாசம்; சொல் குற்றம், பொருட்குற்றம் நிறைந்திருக்கிறது என்று சபையிலுள்ள பிரமுகர்கள் கருதுகிறார்கள்" என்று கூறினார்.

களங்கமற்ற மனத்தினரான பாரதியார் அந்த வார்த்தைகளை நம்பி மனத்தளர்ச்சியுற்றார். நொந்த மனத்துடன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்குப் போய்விட்டார்.

அய்யரவர்களின் பாராட்டு
கூட்டம் முடிவடையும் சமயத்தில் அய்யரவர்கள் சபையில் எழுந்து நின்று பின்வருமாறு பேசினார்:

"இன்று சபையில் என்னைப் புகழ்ந்து முதலில் சில கவிகள் பாடப்பட்டன. சொற்சுவையும், பொருட் சுவையும் உவமை நயமும் மிக்க அக் கவிகளால் நான் மயங்கினேன். தயவு செய்து அக்கவிகளை மற்றொரு தடவையும் சொல்லிக் கேட்க விரும்புகிறேன்" என்று நடுச் சபையில் பகிரங்கமாக கேட்டுக்கொண்டார்.

நிர்வாகிகள் சபையில் பாரதியாரைத் தேடினார்கள். பாரதியார் காணப்படிவில்லை. கவிகள் பாடிய பாரதியைச் சபையில் காணவில்லை என்பதைச் சாமிநாதய்யரிடம் நிர்வாகிகள் வருத்ததுத்துடன் கூறினார்கள்.

அய்யரவர்கள் பாரதியாரின் பெயரை அப்பொழுதுதான் முதல் முதலாகத் தெரிந்துகொண்டார். அந்த நாள் முதல் பாரதியாரிடம் அய்யரவர்களுக்கு அன்பும் மதிப்பும் ஏற்படலாயின.

கூட்டம் நடத்தியர்கள் மறுநாள் காலை பாரதியாரைப் பார்த்து அவரைப்பற்றி அய்யரவர்கள் புகழ்ந்து கூறிய பார்த்தைகளை விவரித்துச் சொன்னார்கள். அப்போதுதான் பாரதியாரும் தமது நண்பரின் தவற்றை அறிந்து அவர் நடத்தைக்கு வருந்தினார்.

அய்யரின் அன்பும் ஆதரவும்
அய்யரவர்கள் மூலம் பாரதியாரின் தமிழ்ப் புலமை, கவித்திறமைபற்றிய கீர்த்தி தமிழ்ப் பண்டிதர்களிடையே பரவலாயிற்றி. 'மித்திரன்' ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரையும் சந்தித்து பாரதியாரின் அருமையை விளக்கிச் சொல்லி, அவரிடம் அதிக பரிவு காட்டும்படியும் சாமிநாதய்யர் கேட்டுக் கொண்டார். அதையொட்டிப் பாரதியாருக்கு மாதம் பத்து ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தது.

அய்யரவர்கள் அத்துடன் மட்டுமன்றி, திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிகளைச் சந்தித்தபோது, பாரதியாரைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். பண்டார சந்நிதிகளும், பாரதியாரைத் திருவாவடுதுறைக்கு அழைத்துவர,தக்கவர்களை அனுப்பினார். அவர்களும் சென்னை வந்து பாரதியாரிடம் சந்நிதானத்தின் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் பாரதியார் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி, வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அதைக் கேட்டு நான் மிகவும் வருந்தினேன். சந்நிதானத்தின் அன்பினால் பாரதியாரின் வறுமை அடிறயோடு நீங்கிவிடக்கூடும்; அதை அவர் ஏற்றுக்கொள்ளாதது பெருந்தவறு என்று எனக்குப்பட்டது. அதைப்பற்றி பாரதியாரை மிகவும் கடிந்துகொண்டேன்.

பாரதியின் மனோநிலை
"இலக்கண இலக்கியங்கள் நிறைய அறிந்தவர்களே அந்தச் சந்நிதானத்துக்குப் போகக்கூடும்; நான் அதற்க லாயக்கில்லை" என்று பாரதியார் என்னிடம் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அப்பொழுதுதான் நான் பாரதியாரின் உண்மை மனோநிலையை அறிந்தேன்.

தமிழ்க்கவி என்ற பெயரில் பாரதியாரின் புகழ் வெளியூர்களிலும் பரவிற்று. தேசீய வாழ்விலும் அவர் நிலை நாளுக்க நாள் உயர்ந்து வந்தது.

விபின சந்திர பாலருடன்
அந்த நாளில் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த 'வந்தே மாதரம்' என்ற ஆங்கிலத் தினசரி தேசீய உணர்ச்சியைப் பல கட்டுரைகள் மூலம் மூட்டி வந்தது. விபினசந்திர பாலரின் கட்டுரைகள் அதில் வந்தன. அவரது பெயர் நாடெங்கும் பரவிற்று. அவருடன் பாரதியார் கடிதப் போக்குவரத்து நடத்தினார். பிரசங்கம் செய்யும் பொருட்டுச் சென்னைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை விபின சந்திர பாரலும் ஏற்றுக்கொண்டார்.

கல்லூரி மாணவரிடையே பாரதியாருக்குச் செல்வாக்கு மிகுந்திருந்ததால் அவர்களிடமிருந்து சிறு தொகைகளை வசூலித்துப் பாலரின் வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்தார்.

பாலருக்கு வரவேற்பு
குறித்த நாளில் பிற்பகல் இரண்டு மணிக்கு ரயிலில் ஸ்ரீ பாலர் பேஸின் பிரிட்ஜ ஸ்டேஷன் வந்துவிட்டார். பாரதியார் எங்கே சென்று அவரை ஸ்டேஷனில் வரவேற்று இரண்டு குதிரை பூட்டிய கோச்சு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். தம்புச் செட்டித் தெருக் கோடியில் வந்தபோது ஊர்வலக் கூட்டம் பெருகிவிட்டது. பல இடங்களில் ஸ்ரீ பாலருக்கு மாணர்வகள் உபசாரப் பத்திரங்கள் வாசித்தளித்தார்கள்.

கடற்கரைப் பிரசங்கங்கள்
சில நாள் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் தினமும் ஸ்ரீ விபின சந்திர பாலரின் பிரசங்கங்கள் நடைபெற்றன. தினமும் தலைமை வகிப்பதற்குப் பிரமுகர்களைத் தேடிப் பிடிப்பது கடினமாக இருந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயர் ஒரு நாள் தலைமை வகித்தார். மயிலாப்பூர்ப் பிரபல வக்கீல்கள், பிரமுகர்கள் தலைமை வகிக்க மறுத்து விட்டார்கள். விபினசந்திர பாலரின் பிரசங்கங்களில் தீவிரவாதம் நிறைந்திருந்ததுதான் காரணம். தீவிர தேசீய உணர்ச்சி நாளுக்கு நாள் மக்களிடையே பரவலாயிற்று. சில நாள் தலைவர் இல்லாமலே பொதுக்கூட்டங்கள் நடந்தன. இக்க்லத்தில்தான் பாரதியாரின் பெருமை பொது மக்களிடையே பரவ ஆரம்பித்தது. பாலரின் நாலைந்து பிரசங்கங்களுக்குப் பின்னர் ஒரு வதந்தி கிளம்பிற்று. ராஜத்துவேஷத்துக்காகச் சென்னை சர்க்கார் பலரைக் கைது செய்யப் போவதாக எங்கும் பேசிக்கொண்டனர்.

வதந்தியும் பரிகாரமும்
சர்க்கார் ஆபீஸ் ஏழை குமாஸ்தாக்கள் பாரதியாரின் நண்பர்கள். ஆகவே சில ரகசியத் தகவர்கள் அவர்கள் மூலம் பாரதியாருக்குத் தெரிந்துவிடுவதுண்டு; பாரதியார் விபின சந்திர பாலரைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைத்தார்.

அதுமுதல் சென்னையில் பாரியாரின் புகழும் தேசீய வாதமும் தீவிரமடைந்தன.

தீவிரத்தின் போக்கு
"வெள்ளையர்களை ஒழித்தால் அன்றித் தேசத்துக்கு விடுதலை கிட்டாது" என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பாரதியார். அவ்வழியில் சிந்தை செலுத்தினார். பேச்சிலும் செய்கையிலும் அதற்கிணங்க நடந்துகொண்டார். சூரத்தில் அப்பொழுது காங்கிரஸ் நடைபெற்றது. பாரதியாரும் பாலரும் காங்கிரஸுக்குப் போவதாகத் தீர்மானித்துக் குறிப்பிட்ட தினத்தில் பாரதி கல்கத்தா பிரயாணமானார். அங்கிருந்து பாலருடனேயே சூரத்துக்குச் சென்றார். சுரேந்திரநாத் பானர்ஜி கோஷ்டியாருக்கும் திலகர் கோஷ்டியாருக்கும் வேற்றுமை காரணமாக காங்கிரஸ் முறிந்தது. பாரதியார் சென்னை வந்து சேர்ந்தார்.
பிரயாண விவரங்களைப்பற்றி நான் கேட்டேன். கல்கத்தாவில் பாலர் வீட்டில் தங்கியதாகவும் அங்கேயே சாப்பிட்டதாகவும் கூறினார். உடனேயே சூரத்பற்றி விளக்கிப் பேசுவதற்கு ஒரு கூட்டத்துககம் ஏற்பாடு செய்தார். அவ்வாறே விளக்கிப் பேசினார். அது முதலே பாரதியாரின் போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது.

அவர் தாம் வீட்டில் அனுஷ்டித்து வந்த பழைய வழக்கங்கள் சிலவற்றை அறவே விட்டுவிட்டார். ராஜீய நோக்கங்களும் தீவிரமடைந்து வெள்ளையர்களை ஒழிப்பதிலேயே நாட்டங் கொண்டார். அதற்காக உபாயங்களில் முனைந்தார்.

இதற்கிடையில் விபின சந்திர பாலருக்கு ராஜதுவேஷக் குற்றத்துக்காக ஆறுமாதச் சிறை வாசம் கிட்டியது. சிறை வாசம் முடிவடைந்து அவர் பிடுதலையானதைப் பாராட்ட பாரதியார் சென்னையில் ஏற்பாடு செய்தார்.

தடையும் மீறலும்
சென்னை போலீஸ் கமிஷர் அந்தக் கொண்டாட்டத்தைத் தடுக்க நினைத்து, "நகரில் நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து தெருவில் செல்லக் கூடாது" என்ற தடை உத்தரவு பிறப்பித்தார்.

அந்தத் தடை உத்தரவை மீறுவதென்றும், கடற்கரையில் பொதுக் கூடடம் நடத்தியே தீருவதென்றும் பாரதியார் தீர்மானித்தார். ஆனால் தம் கருத்தை அவர் பகிரங்கப் படுத்தாமல் ரகசியமாகத் திட்டமிட்டு நண்பர்களிடம் மட்டும் வெளியிட்டார். சகலமும் சகசியமாகவே நடைபெற்றன.

திட்டமிடப்பட்ட அன்று மாலை திருவல்லிக்கேணிக் கடர்கரைக்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் பாரதியாரின் நண்பர்களர் எல்லோரும் ஒன்று கூடினார்கள். அக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். திட்டம் நிறைவேறுவது பற்றி ஒரு பக்கம் மகிழ்ச்சி; போலீஸ் நடவடிக்கை பற்றிய பயம் ஒரு பக்கம். நாங்கள் கூடிய ஐந்து நிமிடத்தில் ஒரு பாண்டு வாத்திய கோஷ்டியும் எங்களுடன் கலந்து கொண்டது. எங்கும் அமைதி நிலவியது. பீதிக்கும் கலவரத்துக்கும் குறைவில்லை. திடீரென்று பாண்டு வாத்தியம் முழங்க ஆரம்பித்தது. கூட்டம் கடற்கரை நோக்கி நகர்ந்தது. பாரதியார் முகத்தில்மட்டும் சற்றும் கலவரம் இல்லை.

'ஐயோ வெடிகுண்டு'
குறிப்பிட்ட தூரம் வரை சென்றவுடன் பாரதியார் என்னிடம் நெருங்கி வந்து ஒரு மனிதனைச் சுட்டிக் காட்டி, "இவரை உனக்கு தெரியுமா?" என்று கேட்டார். அந்தக் கனவான் சுமார் இருபத்தைந்து வயதினராகத் தோன்றினார். சாதாரண அடையுடுத்தி ஒரு சட்டையும் அணிந்திருந்தார். வசீகரமான தோற்றம். அவரை எனக்கு தெரியாதென்றேன். பாரதியார் சித்துக்கொண்டே, "இவர் ஒரு வங்காளி வாலிபர். அவர்க கையில் இரண்டு வெடிகுண்டு இப்போதுது தாயாத வைத்திருக்கிறார். வசீகரமான தோற்றம். அவரை எனக்குத் தெரியாதென்றேன். பாரதியார் சிரித்துக்கொண்டே, "இவர் ஒரு வங்காளி வாலிபர். அவர் கையில் இரண்டு வெடகுண்டு இப்பொழுது தயாராக வைத்திருக்கிறார். என்னைப் போலீசாரோ அல்லது மற்ற அதிகாரிகளோ கைது செய்தாலும், அல்லது கெட்ட நோக்கத்தோடு நெருங்கினாலும் அவர்கள் இந்த வெடிகுண்டுக்கு இறை வெடி வீசுவதில் இவர் சர்த்தர். வேண்டுமென்றே கர்கத்தாவிலிருந்து இவரை வரவழைத்தீருக்கிறேன். வெடி தாயரிப்பதிலும் நிபுணர்" என்று கூறினார்.

இதைக் கேட்ட எனக்கு உடல் நடுக்கம் கண்டது. ஒரு பக்கம் போலீஸ், ஒரு பக்கம் வெடிகுண்டு, இரண்டு வகையிலும் ஆப்த்தாயிருந்ததே என்று அஞ்சினேன். மெதுவாக ஜனக் கூட்டத்தில் நடுவேயிருந்து விலகிச் சுற்றி ஓரமாகவே போனேன்.

பாரதியார் பிரசங்கம்
கடற்கரையை அடைந்ததும் பாண்டு வாத்திய கோஷ்டியினர் போய்விட்டனர். கூட்டத்தின் நடுவில் நின்று பாரதியார் பேசத் தொடங்கினார். வார்த்தைகள் காரசாரமாக உதிர்ந்தன.

"நம் தலைவர்களை நாம் கொண்டாட யத்தனம் செய்தால் போலீஸ் கஷினர் தடையுத்தரவு போடுகிறார். இந்தக் கம்மண்டாட்டி தடை உத்தரவு போடுவதற்கு யார்? இப்படிப்பட்ட உத்தரவுகளுக்கு நாம் ஒரு பொழுதும் பணியமாட்டோம். இந்த அநீதியான கார்யங்கள் ராஜாங்கத்துக்கு அழிவு காலம் சமுபித்துவிட்டது என்பதைக் காட்டுகின்றன" என்று நான்கு நிமிழங்கள் பேசிக் கூட்டத்தைக் கலைத்தார்.

ஜனத்திரளில் வீராவேசம் மிகுந்திருநதது. போலீஸார் தலையிடவில்லை. தவிர, போலீஸரே அப்பிரதேசத்தில் காணப்படவில்லை. அசமப்விதம் ஒன்றுமின்றி ஜனங்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள்.

விபின சந்திர பாலருடன் தொடர்பு வளர வளர பாரதியார் தம் முன்னோர் ஆசாரத்தை அடியோடு கைவிட்டார். ஜாதி சமத்துவத்தை விரும்பினார். இந்தியாவின் விடுதலைக்கு வெள்ளையனை ஒழிப்தே வழி என்பதைத் தீவிரமாக வற்புறுத்தினார். அதற்காக வெடி தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சோகமானிய திரகரும் இவ்வழியையே ஆதரித்ததாகவும் சொல்லப்பட்டது. சில கை தேந்த வாங்காளி வாலிபர்களின் துணை கொண்டு சென்னையிலேயே வெடகுண்டு தயாரிப்பது என்று முடிவு செய்தார். விபினசந்திர பாலரும் அவர்ககு இதில் ஒத்துழைத்தார்.

ரகசியச் சங்கம்
திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குப் போகும் ரஷ்தாவின் இடது புறம் சற்றுத் தூரத்தில் காம்பவுண்டு இல்லாத ஒரு பழைய பங்களா இருந்தது. ரஸ்தாவில் போவோர் சற்று உற்றுப் பார்த்தால்தான் பங்களா தெரியும். வெகுநாளாக யாரும் குடியிராமல் பாழடைந்திருநத அந்த வீட்டில் உபயோகமற்ற சில சாமான்கள் மட்டும் ஒரு பக்கம் அடைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு ரகசியச் சங்கம் கூட்டினார். அச் சங்கத்துக்குப் பெயர் கிடையாது. எந்த விதமான விளம்பரமும் இல்லை. சங்க அங்கத்தினரே முன் பின் ஒருவரை யொருவர் அறியார்; ஒருவர் விலாகர் மற்றவருக்குத் தெரியாது. குறித்த நேரத்தில் கூட்டம் கூடும். ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் அங்கத்தினர் பெயர் மட்டும் குறித்திருக்கும். கூட்டங்களில் தீர்மானம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அவை எழுதப்படமாட்டா. இவ்விதம் ஒவ்வொரு வாரமும் சகசியக் கூட்டங்கள் நடைபெறும். இந்த ரகசியக் கூட்டங்களில் பாரதியார் மனம் விட்டு பேசுவார்.

"ஐம்பதினாயிரம் பேர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பதையும், வெடி வீசுவதையும் பழக்கிவிட்டால் இந்தியாவிலுள்ள வெள்ளையர் அனைவரையும் ஒழித்துவிடலாம்" என்பது அந்த ரகசியக் கூட்டத்தின் திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்றப் பொது ஜனங்களிடையே உணர்ச்சி வேகத்தைத் தூண்ட வேண்டும் என்று பாரதியார் முனைந்தார். வெடிகுண்டு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சகல அதிகாரமும் பாரதியாருக்கு கொடுப்பது என்று சங்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சிவாவின் வீராவேசம்
இச்சங்கக் கூட்டம் ஒன்றில் அக்காலத்தில் பிசித்தி பெற்ற சுப்பிரமணயி சிவா என்பவர் பேசினார். "சர்க்காரின் அடக்குமறைக்கு நான் பயப்படிவில்லை. சிறை வாசத்துக்குத் தயங்கவில்லை. நான் ஏற்கனவே சாமியாராக இருந்து தலை மொட்டையாக இருப்பதால் சர்க்காருக்கு அந்தச் செலவு கூட லாபம்தான். தூக்கு மேடையில் தொங்க நான் தயார். ஒவ்வொரு தேசீயவாதியும் இவ்விதமே இருக்கவேண்டும்." என்று அவர் வீராவேசமாகப் பேசினார். அன்று அப்பேச்சு என்னை பெரிதும் கவர்ந்தது.

பத்திரிகை விளம்பரம்
அந்தக் காலத்தில்தான் ஒரு நாள் சென்னை 'ஹிந்து' பத்திரிகையில் ஒரு விளம்பரத்தைப் படித்தேன். மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் ஒரு கனவான் இருப்பதாகவும், அவர் சோப்பு, மெழுகுவத்தி போன்ற கைத்தொழில் நிபுணர் என்றும், விருப்பமுள்ளவர்கள் செலவின்றி அவரிடம் அத்தொழில் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்த விளம்பரம் கூறியது. என் தகப்பனால் இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு எனக்குத் தகவல் தராமலே சென்னை வந்து, விளம்பரத்தில் குறிப்பிட்ட இடத்துக்குப் போய் அந்தத் தொழிலைப்பற்றி விசாரிக்கச் சொன்னார்.

அப்போது றான் முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூலுக்குச் சமீபத்தில் வசித்து வந்தேன். மயிலாப்பூரில் விசாரிக்க அந்த வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டு நெம்பர் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. 'ஹிந்து' தினசரியில் விளம்பரத்தைப் பார்த்தால் தெரியலாம் - அங்கே தமிழ் தெரியாத ஒருவர் வந்து நான் வந்த காரியத்தை கேட்டார். நானும் சொன்னேன். அந்தக் கனவான் மாலை ஏழு மணிக்குத்தான் வருவார் என்று அவர் கூறினார். அவ்விதமே நான் அன்று மாலை என் தகப்பனாருடன் ஏழு மணிக்கு மயிலாப்பூர் சென்றேன்.

'அந்தக் கனவான்'
அந்தக் கனவான் வசித்து வந்த வீட்டின் வீதி திண்ணை குறுகலானது. கடப்பைக் கல்லாம் கட்டப்பட்டது. நான் காலையில் சந்தித்தவர் எங்களை உட்காரச் சொன்னார். உள்ளே சென்று ஒரு வயதிகரை அழைத்து வந்தார். வீட்டிற்குள்ளிருந்த நடந்து வரும்போது அவர் கொஞ்சம் நிதானமாகவே வந்தார். தலையில் மஹாராஷ்டிரர் அணிவதுபோல் ஒரு முண்டாசு கட்டியிருந்தார். சாதாரணமான நிஜாரும் வெளுப்பான சட்டையும் அணிந்திருந்தார். கால்களில் சடா போட்டிருந்தார். எங்கள் பக்கத்திலேயே ஒரு திண்ணையில் அவரும் உட்கார்ந்தார். தெரு வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இல்லை. சரீரம் மெலிந்து சுமாரான உயரத்துடன் காண்ப்பட்டார். அந்த இருட்டு நேரத்தில் வேறொன்றும் தெளிவாகத் தெளிவாகத் தெரியவில்லை. அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். சற்று உரத்த குரலில் பேசியிருக்கலாம். ஆனால் அவர் மெல்லிய குரலிலேயே பேசினார். நிதானமாகப் பேசினார் ஆனால் திட்டவட்டமாகப் பேசவில்லை. அந்தக் கைத்தொழிலைப் பற்றி அவர் சொல்லிக் கொடுப்பார் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. விளம்பரம் செயது பிறரை ஏமாற்றப்பார்க்கும் யாரோ வட தேசத்தவர் என்று கருதி வீட்டுக்குத் திரும்பிவிட்டோம்.

"அவர்தான் நானாசாஹெப்"
இதற்குப் பிறகு பாரதியாரை நான் சந்தித்தபோது இந்த விளம்பர ஆசாமியைப்பற்றிச் சொன்னேன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, பாரதியார், "என்னிடம் ஏன் சொல்லாமல் மயிலாப்பூர் போனீர்? அந்தக் கனவான் யார் தெரியுமா? அவர் சோப்பும் மெழுகுவர்த்தியும் கற்றுக்கொடுக்கவா வந்தார்? அவருக்கு அவைகளைப்பற்றி என்ன தெரியும்? வெடிகுண்டைப்பற்றிக கேட்டிருந்தால் அவர் விவரமாக சொல்லுவார்" என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. ரகசியமாக அந்தக் கனவானைப்பற்றி பாரதியாரிடம் கேட்டேன்.

அவர்தான் நானாசாஹெப் என்றும் சர்க்காரிடம் பிடிபடாமலிருக்கத் தலை மறைவாயிருக்கிறார் என்றும் சொன்னார்.

நானாசாஹிபை ஒரு தடவையாவது பகலில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

பாரதியாரும் அவரிடம் என்னை அழைத்துப் போவதாக வாக்களித்தார். இரண்டு நாள்கழித்து அது பற்றிப் பாரதியாரிடம் ஞாபக்பபடுத்தியபோது, நானாசாஹிப் ஊரைவிட்டுத் திடீரென்று மறைந்துவிட்டதாகவும், போலீஸார் தம்மைத் தொடர்வதாக நானாசாஹிபின் மனதில் பட்டுவிட்டதுதான் காரணமென்றும் கூறி, பிறகு வேறு ஒரு சமயம் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக சொன்னார். எனக்கு மிகுந்த ஏமாற்றம்.

அய்யங்கார் நண்பர்
திருவல்லிக்கேணியில் ஒருந்த ஒரு அய்யங்கார் பாரதியாருக்கு நண்பரானார். அய்யங்காரின் பொருளுதவியால் 'இந்தியா' என்ற ஒரு வாரப் பத்திரிகையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு ஆசிரியராகப் பாரதி அமர்ந்தார். மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். பாரதியார் புதிய உத்தியோகத்தில் அமர்ந்தது எனக்குத் தெரியாது. மித்திரனில் ஏன் வியாசம் எழுதவில்லை என்ற அவரைச் சந்தித்துக் கேட்டபோது அவர் ஆச்சரியமடைந்தார்.

"வியாசம் எழுதப்படவில்லை என்பதை எவ்விதம் கண்டுபிடித்தீர்?" என்று என்னைக் கேட்டார். அவருடைய தமிழ் நடை அந்தப் பத்திரிகையில் காணப்படாததால் கண்டுபிடித்ததாகச் சொன்னேன். பிறகு அவர் இரண்டு பத்திரிகையிலும் உத்தியோகம் பார்த்து வந்தார். அதற்கப் பிறகு மாதம் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு 'இந்தியா' பத்திரிகையில் மட்டுமே முழுக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மித்திரனைப் பாரதியார் விட்டுவிட்டது உ.வே.சாமிநாதய்யருக்குத் தெரியவந்தபோது, அவர் ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் சென்று கடுமையாகக் கோபித்துக் கொண்டார். பாதியாரை விலக்கியது சரியல்ல என்றும், அத்தகைய புலவர் கிடைப்பது அரிது என்றும் ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் எடுத்துச் சொன்னார். பாரதியாரைத் தாம் விலக்கவில்லை என்றும், எவ்வளவு சொல்லியும் பாரதியார் தாமே பிடிவாதமாக விலகிவிட்டார் என்றும் அவரை பதவியில் வைத்துக்கொள்ள எப்பொழுதும் தயார் என்றம் ஜி.சுப்பிரமணிய ஐயர் சொன்னார். சாமிநாதய்யரைச் சாந்தப்படுத்துவதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

'இந்தியா' பத்திரிகை
பாரதியார் மித்திரனை விட்டு விலகியதுபற்றி எனக்கு வருத்தம்தான். இதுபற்றி அவரை கடிந்துகொண்டேன். மீண்டும் அந்தப் பத்திரிகையிலேயே சேர வேண்டும் என்றும் கூறினேன். பாரதியார் இசையவில்லை. 'இந்தியா' பத்திரிகை பிரபலமாயிற்றி. அதன் தீவிரத்தைக் கண்டு ஜி.சுப்பிரமணிய ஐயர் திகிலடைய ஆரம்பித்தார். பாரதியாரின் பிரசங்கத்தை அவர் கேட்டபோது பாரதியாருக்கு ராஜாங்க தண்டனை நிச்சயம் என்றும் தீர்மானித்தார்.

'இந்தியா' பத்திரிகையில் வரும் கட்டுரைகளைக் கண்டு சென்னை அரசாங்கத்தார் கலவரமடைந்தார்கள். ஆசிரியர், சொந்தக்காரர் உட்பட அப்பத்திரிகைமீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இந்த ரகசியம் பாரதிக்குத் தெரிந்தது. அடக்குமுறைக்கு ஆளாவதைவிடச் சென்னையைவிட்டு வெளியேறுவது மேல் என்று உடனே புதுச்சேரிக்குப் போனார். அங்கு 'இந்தியா' முன்போலவே டந்தது. அவரைச் சந்திக்கப் புதுச்சேரிக்கு நான்கு தடவை போயிருக்கிறேன்.

புதுச்சேரியில்
அவரைச் சந்தித்த காலத்தில் சிலப்பதிகாரம் படித்து விளக்கினார். அது மறக்கக்கூடியதல்ல. சோழவந்தான் அரசன் ஷண்முகனார், ராமநாதபுரம் வித்வான் மு.ராகவய்யங்கார், மதுரைச் சங்க வித்தான் திரு.நாராயண அய்யங்கார், மஹாமஹோபாத்தியாய சாமிநாத அய்யர் முதலிய பெரியோர்களிடமும் தமிழ்ப் பாடம் படிக்கக் கேட்டிருக்கிறேன். ஆனால் பாரதியார் பாடல்களைப் படிக்கும் போது ஏற்பட்ட இன்பம் வேறு எங்கும் நான் அடையவில்லை.

'இந்தியா' பத்திரிகை வரவர மங்கலாயிற்று. புதுச் சேரியில் பாரதியார் அரசியல் துறை ஒன்றிலும் ஈடுபடவில்லை. சிலகாலம் மனைவியுடன் இருந்தார். அவரை ஆதரிப்பார் இல்லை. வறுமை மிகுந்தது.

மீண்டும் சென்னையில்
அந்நிலையில் அவர் புதுவையைவிட்டு வெளியேறினார். பிறகு சென்னை வந்து மித்திரனில் சேர்ந்தார். அவரை அப்போதும் வறுமை மிகவும் பாதித்தது. பணம் தேடுவது அவசியமாயிற்று. விவேகனாந்தர் எழுதிய புத்தகங்களை அவர் நன்கு படித்திருந்ததால் வேதாந்த உபநியாஸங்கள் மூலம் பணம் திரட்ட முயன்றார். இரண்டோர் உபந்யாஸங்கள் நடைபெற்றன. ஆனால் பணம் கொடுத்துக் கேட்பார் இல்லை.

அபினி வேகத்தால் நல்ல நினைவின்றி ஒரு நாள் யானையின் வசமானார். அந்தத் தாக்குதல் முதற்ககொண்டு அவர் நோயுற்றுக் காலமானார். அவர் ஜீவித காலத்தில் தமிழ்நாடு தன் கடமையைச் செய்யவில்லை. அவர் காலமான பிறகு விழித்துக்கொண்டு தன் கடமையைச் செய்கிறது.

Website Designed by Bharathi Sangam, Thanjavur